சமந்தாவின் அதிர்ச்சி முடிவு.. காரணம் அந்த நோய் தான்
சமந்தா
நடிகை சமந்தா சமீபத்தில் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார்.
விரைவில் அவர் குணமடைந்து பழையபடி வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமந்தா நடிப்பில் கடைசியாக வெளிவந்த யசோதா படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து சகுந்தலம், குஷி ஆகிய படங்கள் வெளிவரவுள்ள. இதில் குஷி படத்தின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் நிறைவு பெறவில்லை.
சினிமாவை விட்டு விலகலா
இப்படத்தில் தன்னுடைய மீதமுள்ள காட்சியில் நடிக்க ஜனவரி மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் சமந்தா. இந்த படத்தில் நடித்து முடிந்த பின், நடிப்புக்கு நீண்ட கால விடுமுறை விட முடிவ செய்துள்ளாராம்.
காரணம் முழுமையாக அந்த நோயில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக என்று தெரிவிக்கின்றனர்.
இதனால் சமந்தா கமிட் செய்திருந்த பாலிவுட் படங்கள் கூட அவர் கையை விட்டு போக பெரிதும் வாய்ப்புகள் உள்ளது என தெரிகிறது. இந்த செய்தி சமந்தா ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
அஜித்தும் நம்பர் 1 இல்லை, விஜய்யும் நம்பர் 1 இல்லை.. முதலிடத்தில் வேறு யார் தெரியுமா