மனைவியை பயமுறுத்த தற்கொலை prank செய்த நடிகர்.. நிஜத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

By Parthiban.A Apr 25, 2023 11:40 AM GMT
Report

 சில தினங்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகர் சம்பத் ராம் என்பவர் பெங்களூரில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்கிற செய்தி வெளியாகி இருந்தது. 35 வயதான அவரது தற்கொலை கன்னட சினிமா மற்றும் டிவி துறையினருக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த வருடம் தான் அவருக்கு திருமணம் நடைபெற்று இருந்த நிலையில் தற்போது தற்கொலை செய்துகொண்டிருப்பது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

தற்போது சம்பத் ராம் மனைவி 5 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவலும் வைரலாகி வருகிறது.

மனைவியை பயமுறுத்த தற்கொலை prank செய்த நடிகர்.. நிஜத்திலேயே உயிரிழந்த பரிதாபம் | Sampath Ram Suicide Is Prank Gone Wrong

விபரீதத்தில் முடிந்த பிராங்க்

சம்பவம் நடந்த அன்று சம்பத் மற்றும் அவரது மனைவி இடையே சிறிய தகராறு ஏற்பட்டது என்றும், அதன் பின் மனைவியை பயமுறுத்த தான் தற்கொலை செய்துகொள்வதாக தூக்கு போடுவது போல prank செய்திருக்கிறார் சம்பத்.

அது விபரீதத்தில் முடிந்து நிஜத்திலேயே அவர் உயிரிழந்து இருக்கிறார். இந்த விஷயத்தை சம்பத் உடன் நடித்த நடிகர் ராஜேஷ் துருவா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் கூறி இருக்கிறார்.  

ஸ்ருதி ஹாசன் போட்டிருக்கும் புது டாட்டூ! ஹிந்து கடவுளின் குறியீடு இருந்ததால் வைரல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US