சாண்டி மாஸ்டருடன் செம குத்தாட்டம் போட்ட நடிகை அதிதி ஷங்கர்.. படுவைரலாகும் வீடியோ
அதிதி ஷங்கர்
விருமன் படத்தின் மூலம் தற்போது தமிழ் சினிமாவின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவராகி இருக்கிறார் அதிதி ஷங்கர். இப்படம் அதிதி ஷங்கரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்துள்ளது.
விருமன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடிக்கிறார். மடோன் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் பத்திரிகையாளராக அதிதி நடிக்கிறார் என தகவல் கூறப்படுகிறது.
நல்ல நடிகை என்று மட்டுமல்லாமல் சிறந்த டான்சர் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேரெடுத்துள்ளார் அதிதி. அதற்க்கு உத்தரமே விருமன் படத்தில் அவர் ஆடிய நடனம் தான்.
சாண்டி மாஸ்டருடன் செம குத்தாட்டம்
அதிலும் குறிப்பாக விருமன் படத்தில் அதிதியின் நடனத்திற்காகவே படத்தில் தனியாக ஒரு வரிகள் இல்லாத ட்ராக் பாடல் இடம்பெற்றிருந்தது.
இதில் அருமையாக நடனம் ஆடியிருந்தார் அதிதி. இந்த பாடலில் அதிதிக்கு நடன இயக்குனராக இருந்தது நம் அனைவருக்கும் பிடித்த சாண்டி மாஸ்டர் தான்.
இந்நிலையில், சாண்டி மாஸ்டருடன் இணைந்து அந்த பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோவை அதிதி ஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ..

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
