விபத்திலிருந்து மீண்ட பிரேமலு நடிகர்.. குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வெளியிட்ட பதிவு
சங்கீத் பிரதாப்
பிரேமலு திரைப்படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் சங்கீத் பிரதாப். இவர் அந்த படத்தின் கதாநாயகனான நஸ்லேனின் நண்பனாக நடித்து மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் சம்பாதித்தார்.
அந்த படத்தை தொடர்ந்து, சங்கீத் பிரதாப் ப்ரொமான்ஸ் என்ற படத்தில் நடித்து கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் அந்த படத்தின் படப்பிடிப்பின்போது சங்கீத், நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட மூன்று நபர்கள் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இதில், சங்கீத் பிரதாப் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஓரளவுக்கு குணமாகி உள்ளார். இதை தொடர்ந்து, தற்போது சங்கீத் தான் குணமாகி வந்த புகைப்படங்களை வெளியிட்டு அதன்கீழ் ஒரு பதிவை எழுதியுள்ளார்.
சங்கீத் வெளியிட்ட பதிவு
அதில், நம் வாழ்வில் திட்டமிட்டபடி எதுவும் நடப்பதில்லை அதுபோல தான் இந்த விபத்து. நான் எவ்வளவு பெரிய ரிஸ்க்கில் இருந்தேன் என்பதை அந்த மருத்துவமனையில் இருக்கும் செவிலியர் சொல்லி தான் எனக்கு தெரிந்தது.
நான் இன்று குணமாக முக்கிய காரணம் என்னை குழந்தை போல் பத்திரமாக பார்த்துக்கொண்ட என் மனைவி மற்றும் மருத்துவ சிகிச்சை தான். அவர்களுக்கு நன்றி எனவும், மேலும், தற்போது ப்ரொமான்ஸ் படத்தில் நடிக்க நான் தயாராகி விட்டதாகவும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ளும் நாட்களுக்காக ஆர்வமாக உள்ளதாகவும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
