நீண்ட நாட்கள் கழித்து வெளிவந்த விஜய் மனைவி புகைப்படம்.. இதோ பாருங்க
விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் தளபதி விஜய். இந்த நேரத்தில் திடீரென சினிமாவிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கி, தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். இதனால் வழக்கமாக இருக்கும் எதிர்பார்ப்பை விட ஜனநாயகன் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி வர பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், ப்ரியாமணி, கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்சேஷனல் ஹிட்டாகியுள்ள Lokah படத்தில் முதலில் நடிக்கவிருந்தது கல்யாணி கிடையாது! வேறு யார் தெரியுமா
சினிமாவிலிருந்து வெளியேறியுள்ள விஜய் அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில்தான் தனது தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அடுத்ததாக செப்டம்பர் 15ம் தேதி முதல் மக்களை நேரடியாக சந்திக்க, தமிழக முழுவதும் பயணம் செல்கிறார் விஜய்.
விஜய்யின் மனைவி சங்கீதா
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவை பொது இடங்களில் பார்த்து பல நாட்கள் ஆகிறது. விஜய்யின் படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் அடிக்கடி அவரை பார்க்க முடிந்தது. ஆனால், மாஸ்டர் படத்திற்கு பின் சங்கீதாவை பொது இடங்களில் பார்க்க முடியவில்லை. கடந்த ஒரு ஷங்கரின் மகள் திருமணத்தில் மட்டும் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், பல நாட்கள் கழித்து சங்கீதாவின் ரீசன்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. சங்கீதாவுடன் அவருடைய மகன் சஞ்சய்யும் இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்..
