சங்கி என்பது தவறான வார்த்தையா, ரஜினி கூறிய பளீச் பதில்- ஐஸ்வர்யா சொன்னது இதுதான்
லால் சலாம்
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் லால் சலாம்.
இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தான் படத்தின் இசை வெளியீட்ட விழா சமீபத்தில் தாம்பரத்தில் நடைபெற்றது.

ரஜினியின் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும்போது, நான் எனது தந்தையை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி. எனக்கு இந்த வார்த்தையை கூறும்போது மிகவும் கோபமாக இருந்தது.
இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும், எனது தந்தை சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்து இருக்க மாட்டார் என்றார்.
அவரது பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது, அதோடு சங்கி என்பது கெட்ட வார்த்தையா எனவும் நிறைய கேள்விகள் எழும்பியது.
இதுகுறித்து அண்மையில் விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை, அது கெட்ட வார்த்தை என அவர் எங்கும் சொல்லவில்லை.
அப்பா ஒரு ஆன்மீகவாதி அவரை ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று நினைப்பது அவருடைய பார்வை, பட புரொமோஷனுக்காகவும் பேசப்படவில்லை என கூறியுள்ளார்.
