படப்பிடிப்பில் திடீரென குண்டுவெடிப்பு- லியோ பட நடிகர் சஞ்சய் தத் படுகாயம்
சஞ்சய் தத்
KGF படம் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர் இப்போது விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.
காஷ்மீரில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இருந்தது.
தற்போது பிரேம் இயக்கத்தில் கன்னட நடிகர் துருவா சர்ஜா நடித்துவரும் கேடி படத்தின் படப்பிடிப்பு பெங்களுரில் மகடி சாலையில் படமாக்கப்பட்டு வருகிறது.
திடீர் குண்டுவெடிப்பு
இந்த படத்தின் படப்பிடிப்பில் துருவா சர்ஜா மற்றும் வில்லன் சஞ்சய் தத் ஆகியோர் வெறித்தனமான சண்டை காட்சி படமாக்கப்பட்டது.
விறுவிறுப்பாக சண்டை காட்சி எடுத்து வந்த போது, எதிர்பாராத விதமாக, டம்மி குண்டு சற்று வீரியத்துடன் சஞ்சய் தத்துக்கு மிகவும் பக்கத்திலேயே வெடித்ததில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சஞ்சய் தத்தின் முகம், கை மற்றும் முழங்கை பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு பின் பாலா வெளியிட்ட முதல் போட்டோ- ஒல்லியாக ஆளே மாறிவிட்டாரே?