தனது காதல் மனைவி ஆல்யா மானசாவிற்கு புதிய பரிசு கொடுத்துள்ள சீரியல் நடிகர் சஞ்சீவ்- என்ன பாருங்க
ஆல்யா-சஞ்சீவ்
சின்னத்திரை ரசிகர்களுக்கு இவர்களை பற்றி தெரியாமல் இருக்கவே இருக்காது. விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற தொடரில் நாயகன்-நாயகியாக நடித்து மக்களால் கொண்டாடப்பட்ட ஜோடி தான் சஞ்சீவ்-ஆல்யா மானசா.
இவர்களுக்குள் அந்த தொடர் மூலம் காதல் ஏற்பட அப்படியே நிஜ வாழ்க்கையிலும் இணைந்தார்கள். அதன்பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் பிறந்தனர்.
தற்போது சஞ்சீவ் சன் டிவியின் டாப் சீரியலான கயல் தொடரில் நடிக்க ஆல்யா மானசா அதே டிவியில் இனியா என்ற தொடரில் நடிக்கிறார்.
இதுதவிர இவர்கள் இருவரும் அதிகம் போட்டோ ஷுட் நடத்துவது, தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என படு பிஸியாக உள்ளனர்.
புதிய பரிசு
சஞ்சீவ்-ஆல்யா இருவருமே அடிக்கடி ஏதாவது புதிய பொருள் வாங்குவார்கள். சஞ்சீவ் பிறந்தநாளுக்கு காரை பரிசளித்திருந்தார் ஆல்யா மானசா. தற்போது சஞ்சீவ் தனது மனைவி ஆல்யாவிற்காக புதிய மொபைல் போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
புதிய மொபைலுடன் சஞ்சீவ் ஆல்யாவுடன் எடுத்த போட்டோ இதோ,