கயல் சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ்! சன் டிவி ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி
கயல் சீரியல்
சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் கயல். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த தொடர் தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
கயல் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி வாரத்தில் இருந்தே அது தான் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற சேனல்களின் சீரியல்கள் இதன் டிஆர்பியை முந்த முடியாமல் திணறி வருகின்றன.
சஞ்சீவ் விலகல்
கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ் தற்போது தொடரில் இருந்து விலகி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.
அவரே இன்ஸ்டாகிராமில் அந்த பதிவை ஷேர் செய்து ரசிகர்களின் கருத்தை கேட்டிருக்கிறார்.
Also Read: சன் டிவியில் பொன்னியின் செல்வன் 1.. தேதி, நேரம் இதோ!