சீரியல் நடிகர் சஞ்சீவ் வெங்கட்டிற்கு இன்று சந்தோஷமாக நாள்- அவரே வெளியிட்ட போட்டோ
சஞ்சீவ் வெங்கட் சின்னத்திரை என்று நினைத்தாலே இவர் நினைவுக்கு வந்துவிடுவார். அந்த அளவிற்கு சீரியல்கள், நடன நிகழ்ச்சிகள் மூலம் இவர் நம் மனதில் நின்றுள்ளார்.
நடித்த தொடர்கள்
30 தொடர்களுக்கு மேல் இவர் நடித்திருந்தாலும் மெட்டி ஒலி, அண்ணாமலை, திருமதி செல்வம் போன்ற சீரியல்கள் இவருக்கு பெரிய பெயர் கொடுத்துள்ளன. கடைசியாக இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி 2 தொடரில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் 5
தொடர்களில் நடித்துவந்த சஞ்சீவ் திடீரென வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக பிக்பாஸ் 5வது சீசனில் நுழைந்தார். ஆனார் சொல்லும் படியாக இவர் விளையாடவில்லை, போன வேகத்திலேயே வெளியேறிவிட்டார்.
திருமண நாள்
சீரியல் நடிகர் சஞ்சீவ் சக நடிகையான ப்ரீத்தியை காதலித்து 2009ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இன்று அவர்களது திருமண நாள், இந்த ஸ்பெஷல் தினத்தில் சஞ்சீவ் தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
Happy anniversary to my love....❤️ pic.twitter.com/qIX9GIlGIf
— Sanjeev (@SanjeeveVenkat) March 12, 2022
தனது காதலி மஞ்சிமாவிற்கு கௌதம் கார்த்திக் அழகான பிறந்தநாள் பதிவு- செம வைரல்