மகன் பிறந்திருக்கும் நேரத்தில் சீரியல் நடிகர் சஞ்சீவிற்கு கிடைத்த கௌரவம்- மகிழ்ச்சியில் ஆல்யா மானசா
சீரியல் ஜோடிகளில் பலர் ரசிகர்களின் பேவரெட்டாக உள்ளனர். அதில் மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்து பெரிய ஆதரவை பெற்று வருபவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா.
மகனின் பெயர்
ஆல்யா 2020ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார், அவருக்கு ஐலா என்று பெயர் வைத்தனர். தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு மகன் பிறந்துள்ளார்.
மருத்துவர்களிடம் இருந்து குழந்தையை பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் இந்த தகவலை சஞ்சீவ் கூறியிருந்தார். அதோடு தனது மகனுக்கு அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளதாகவும் அவரே கூறியிருந்தார்.
மகனின் கையை வைத்து ஒரு புகைப்படம் எடுத்து அதை வெளியிட செம வைரலானது.
சஞ்சீவிற்கு கிடைத்த விருது
மகன் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் சஞ்சீவிற்கு தற்போது ஒரு விருது கிடைத்துள்ளது. அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் தொடரில் நாயகனாக நடித்து வருவது நாம் அனைவருக்கும் தெரியும்.
இந்த தொடர் ஆரம்பித்த நாள் முதல் TRPயிலும் முதல் இடத்திலேயே இருந்து வருகிறது.
அண்மையில் சன் சின்னத்திரை கலைஞர்களுக்காக சன் குடும்பம் விருதுகள் நடைபெற்றது. இதில் சஞ்சீவிற்கு நட்சத்திர நாயகன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த ஆல்யா மானசாவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மகளை ரீல்ஸ் வீடியோ ஆட வைத்து கெடுக்கும் நித்யா: மீட்டு கொடுக்க தாடி பாலாஜி புகார்