திரையரங்கில் 300 கோடிக்கும் மேல் வசூல்.. டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படம்
சங்கராந்திகி வஸ்துனம்
இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியை பல திரைப்படங்கள் கைப்பற்றியது. அப்படி ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம்தான் சங்கராந்திகி வஸ்துனம்.
இயக்குநர் அனில் ரவிப்புடி இயக்கத்தில் உருவான இப்படத்தில் வெங்கடேஷ், மீனாக்ஷி சௌத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நகைச்சவை கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து, தயாரிப்பாளருக்கு ரூ. 150 கோடி வரை லாபத்தை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சங்கராந்திகி வஸ்துனம் 2 படத்தின் அறிவிப்பும் வெளிவந்துவிட்டது. இப்படம் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என்கின்றனர்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பு
திரையரங்கில் ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட இப்படம் தற்போது டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. ஆம், விரைவில் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளனர்.
ஆனால், எந்த தேதியில் எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கவில்லை. திரையரங்கில் கொண்டாடப்பட்ட இப்படத்தை தொலைக்காட்சியிலும் கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Get ready to relive the Sankranthi vibe again 💥😁#SankranthikiVasthunnam Coming Soon On #ZeeTelugu #SankranthiKiVasthunnamOnZeeTelugu#WorldTelevisionPremiereSankranthikiVasthunnam#FirstTVloVasthunnam #TVbeforeOTT #SVonTV@VenkyMama @anilravipudi @aishu_dil @Meenakshiioffl… pic.twitter.com/pIP6UUoNIY
— ZEE TELUGU (@ZeeTVTelugu) February 10, 2025

கல்லூரியில் மோசமான ஆங்கில பேச்சால் கேலி செய்யப்பட்டவர்.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை News Lankasri

செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பூமிக்குத் திரும்பும் சுனிதாவுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்? அறிவியலாளர்கள் கூறும் தகவல் News Lankasri

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan
