கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை! ஏன் தெரியுமா
சண்முக பாண்டியன்
கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் இவர் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வந்தார்.
மேலும் இவர் நடிப்பில் இயக்குநர் சசிகுமார் இயக்கத்தில் குற்றப்பரம்பரை என்ற வெப் சீரிஸ் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது.
பல மாதங்களுக்கு முன்பே இது குறித்து தகவல் வெளியான நிலையில் இன்னும் அந்த வெப் சீரிஸ் எடுக்கப்படாமல் உள்ளது. சசிக்குமாரும் அடுத்தடுத்த திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
குற்றப்பரம்பரை
இதற்கிடையே இது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது, குற்றப்பரம்பரை' வெப்சீரிஸ் உருவாக இருப்பது உறுதி, இதற்காக சண்முக பாண்டியன் அடர்ந்த தாடி, மீசை வளர்த்து வருகிறார். அவரது கெட்டப் இன்னும் ரெடியாகவில்லை. இந்த வெப்சீரிஸை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது.
மேலும் சண்முக பாண்டியன் போலவே நன்கு உயரம் உள்ள கேரக்டர்கள் படத்தில் நிறையவே உள்ளதால் சத்யராஜ், ராணா ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
இந்த வெப்சீரிஸ் உருவாக இப்படி சில காரணங்கள் இருப்பதால் இன்னும் தொடங்கபடாமல் இருக்கிறதாம். மேலும் இதற்காக தாடி, மீசை வளர்த்து உள்ளதால் அவரால் வேறு படங்களில் கமிட்டாக முடியவில்லையாம்.
நடுரோட்டில் காரை நிறுத்தி புகைப்படம் எடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்

சனி பெயர்ச்சி 2025..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் - உங்க ராசி இருக்கா தெரிஞ்சுக்கோங்க! IBC Tamilnadu
