பணத்தை பற்றி கவலைப்படாத கமல் ஹாசன்.. உண்மையை உடைத்து கூறிய முக்கிய நடிகர்
கமல் ஹாசன்
தமிழ் சினிமாவில் மூத்த முன்னணி நடிகராக இருவர்பவர் கமல் ஹாசன். இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் படம் வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதி நடித்துள்ளார்.

சந்தான பாரதி பேட்டி
இவர் கமல் ஹாசனின் 50 வருட நண்பரும் ஆவர். சந்தான பாரதியின் இயக்கத்தில் வெளிவந்த குணா மற்றும் மகாநதி ஆகிய படங்களிலும் கமல் ஹசன் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கமல் ஹாசன் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய சந்தான பாரதி, " கமல் ஹாசன் பணத்தை பற்றி கவலை படமாட்டார். அவருக்கு படமும், காட்சியும் தான் முக்கியம். அதற்காக எண்ணவேண்டும் என்றாலும் செய்வார். அந்த அளவிற்கு சினிமாவின் மேல் காதல் கொண்டுள்ளார் " என்று கூறியுள்ளார்.