நின்றுபோன அஜித் - விக்னேஷ் சிவன் படம் குறித்து பேசிய சந்தானம்.. இப்படியொரு ரோலில் அஜித்துடன் நடிக்கவிருந்தாரா
ஏகே 62
அஜித் - மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் ஏகே 62 என்ற கட்டத்தில் இருந்தபோது விக்னேஷ் சிவன் தான் இயக்குனராக இருந்தார்.

ஆனால், திடீரென என்னவானது என தெரியவில்லை, படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறினார். விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த சமயத்தில் இப்படத்தில் சந்தானம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருக்கிறார் என கூறி தகவல் ஒன்று வெளிவந்தது.
சந்தானம் பேட்டி
ஆனால், அதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சந்தானம் ஏகே 62 குறித்து பேசினார்.

"விக்னேஷ் சிவன் என்னிடம் கதை கூறினார். அதில் என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. சீரியஸான ரோல் ஆனாலும், நகைச்சுவையாகவும் இருந்தது. படப்பிடிப்பின் போது அஜித்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என அறிவிக்கலாம் என இருந்தோம். ஆனால், அது நடக்கவில்லை." என கூறியுள்ளார்.
சினிமாவில் Adjustment கேட்ட பிரபலம், கொடுமை அனுபவித்த நடிகை தாரணி- முதன்முறையாக ஓபன் டாக்