மீண்டும் காமெடியனாக சந்தானம்! அஜித் போன் செய்து என்ன சொன்னார்?
சந்தானம் ஒருகாலத்தில் காமெடியனாக கொடிகட்டி பறந்தவர். அவரது காமெடிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியதும் இல்லை.
மீண்டும் காமெடியன்
சந்தானம் ஒரு கட்டத்துக்கு பின் ஹீரோவாக நடிக்க தொடங்கியதால் காமெடியனாக நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டார். தற்போது சோலோ ஹீரோவாக தொடர்ந்து படங்கள் நடித்து வந்தாலும், பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி தான் வருகிறார்.
இந்நிலையில் சந்தானம் அடுத்து அஜித்தின் AK62 படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒப்புக்கொண்டது ஏன்
விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தின் கதையை கேட்க சொல்லி அதன் பின் அதில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை நீங்க தான் நடிக்க வேண்டும் என அஜித்தே சந்தானத்திடம் போனில் சொன்னதாக தெரிகிறது.
அஜித் அன்பாக கேட்டுக்கொண்டதால் தான் சந்தானம் மீண்டும் காமெடியனாக மீண்டும் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது.
வாரிசு நடிகர்கள் சம்பள விவரம்: விஜய்க்கு மட்டும் இத்தனை கோடியா?