திருமணம் குறித்தி பேசினாலே பதறும் ஸ்ருதிஹாசனின் காதலர் ! அவரே அளித்த பேட்டி
ஸ்ருதி ஹாசன் - சாந்தனு
நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் எழாம் அறிவு திரைப்படத்தின் முலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்தியளவில் பிரபலமான நடிகையாக மாறினார் ஸ்ருதிஹாசன்.
தீவிர நடிப்பில் இருந்து ஒதுங்கியிருக்கும் ஸ்ருதிஹாசன் தற்போது சாந்துனு என்பவரை காதலித்து வருகிறார். கவுகாத்தியை சேர்ந்த சாந்தனு சென்னையில் தான் தனது பொறியல் படிப்பை படித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்துள்ள சாந்தனு “நான் சென்னையில் என்ஜினியரிங் படித்தேன், கலைத் தொழிலைத் தொடர்வதற்காக படிப்பை பாதியிலேயே நிறுத்தினேன். சென்னை நகரம் கலாசாரம் நிறைந்தது. நகரத்தின் கட்டடக்கலை, குறிப்பாக கோயில்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
திருமணத்தைப் பற்றி பேசினாலே எனக்கும் ஸ்ருதிக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. ஒரு கலைஞனாக, எந்த விதமான சமூகக் கட்டமைப்பையும் புரிந்துகொள்வது கடினம். நான் எப்போதும் சுதந்திரமாக, எல்லாவற்றையும் வெளிப்படுத்தி வாழ்ந்து வருகிறேன்.
அதைப் புரிந்துகொள்ளும் துணை இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எங்கள் உறவு கலையை அடிப்படையாகக் கொண்டது” என நடிகை ஸ்ருதிஹாசன் உடனான தனது காதல் குறித்து பேசியுள்ளார் சாந்தனு.
தனது பழைய காருடன் நடிகர் அஜித் ! இணையத்தில் வைரலான அவரின் அன்சீன் புகைப்படம்

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
