கேங்ஸ்டராக மாறிய அம்மா நடிகை.. சரண்யா பொன்வண்ணனா இப்படி நடிப்பது? வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்
நடிகை சரண்யா பொன்வண்ணனை ரசிகர்கள் இதுவரை செண்டிமெண்டாக நடிக்கும் அம்மா நடிகையாக தான் இதுவரை பார்த்திருப்பார்கள். ஆனால் தற்போது அவரது இமேஜை மாற்றும் வகையில் ஒரு வித்யாசமான முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
கேங்ஸ்டர்
தற்போது சரண்யா ஒரு படத்தில் கேங்ஸ்டராக நடித்து வருகிறார். கேங்ஸ்டர் கிரானி என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்து இருக்கிறது. அதில் கையில் துப்பாக்கி உடன் சரண்யா இருக்கிறார்.
வழக்கமான தமிழ் சினிமா கேங்ஸ்டர் போல தான் சரண்யா பொன்வண்ணன் ரோலும் இருக்கும் என்று படக்குழு தெரிவித்து இருக்கிறது.

கதை என்ன?
விஷ்ணு ராமகிருஷ்ணன் இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முழுக்க சென்னையில் தான் நடைபெற இருக்கிறது. வன்முறையில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் ஒரு கேங்ஸ்டர் பற்றியது தான் கதையாம்.
இந்த படத்தின் போஸ்ட்டரை நடிகர் ஜீவா வெளியிட்டு இருக்கிறார். "#SaranyaPonvannan is back with a bang. This time not as an ordinary mother, but an extraordinary #GangsterGranny" என ஜீவா குறிப்பிட்டு இருக்கிறார்.
#SaranyaPonvannan is back with a bang. This time not as an ordinary mother, but an extraordinary #GangsterGranny ???@AmzathH @nadigarraaj @vishnurkrishna @stuntssudesh @Tauruscinecorp @ksmanoj@RIAZtheboss @V4umedia_ pic.twitter.com/TZGPIznu27
— Jiiva (@JiivaOfficial) March 25, 2022
நடிகை இந்துஜாவா இது? அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாரே