விஜய்யுடன் மட்டும் நடிக்காமல் இருப்பது ஏன்?- சரண்யா பொன்வண்ணன் கூறிய பதில்
பேவரெட் அம்மா
தமிழ் சினிமாவில் இப்போது உள்ள ரசிகர்களுக்கு ஏன் சினிமா கலைஞர்களுக்கு கூட பேவரெட் அம்மா யார் என்று கேட்டால் உடனே சரண்யா பொன்வண்ணன் என்று கூறுவார்கள்.
காரணம் அவர் அந்த அளவிற்கு அம்மா வேடத்தில் நிறைய நடித்து மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளார்.
இவர் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் எல்லா ஹீரோக்களுடன் இணைந்து அம்மாவாக நடித்துவிட்டார், ஆனால் விஜய்யுடன் மட்டும் இன்னும் இணைந்து நடிக்கவில்லை.
குருவி படத்தில் நடித்திருக்கிறார் ஆனால் விஜய்யின் அம்மாவாக நடிக்கவில்லை.
நடிகையின் பதில்
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் சரண்யாவிடம் விஜய்யுடன் மட்டும் ஏன் அம்மாவாக இன்னும் நடிக்கவில்லை என கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஏன் என்றே தெரியவில்லை, அதற்கான வாய்ப்பு அமையவில்லை அதான் உண்மை.
ஆனால் அவர் என்னை பொது நிகழ்ச்சியில் சந்தித்தால் கண்டிப்பாக நாம் இணைந்து ஒரு படம் பண்றோம் என கூறுவார்.
வருங்காலத்தில் கண்ப்பாக நாங்கள் இணையும் வாய்ப்பு வரும் என கூறியுள்ளார்.
10 பெட்ரூம் மேல் வைத்து நடிகர் விஜயகுமார் கட்டியுள்ள சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- கலக்கல் வீடு இதோ

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
