மறைந்த நடிகர் சரத்பாபு முதல் மனைவியின் சோகமான நிலை- இப்போது இப்படியா இருக்கிறார்
நடிகர் சரத்பாபு
கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா மக்கள் மறைந்த நடிகர் சரத்பாபுவை பற்றி அதிகம் பேசி வருகிறார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 400 படங்கள் வரை நடித்துள்ள இவர் தமிழில் கே.பாலசந்தர் இயக்கிய பட்டண பிரவேசம் படம் மூலம் அறிமுகமானார்.
72 வயதாகும் நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக மே 22ம் தேதி உயிரிழந்தார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டது, இங்கே தகனம் செய்யப்பட்டது.
முதல் மனைவி
சரத்பாபு அவர்கள் முதலில் ரமா பிரபா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணம் விவாகரத்தில் முடிய தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக எம்.என்.நம்பியாவின் மகளான சினேகாவை மறுமணம் செய்தார், அவர்களின் வாழ்க்கையும் பாதியில் முடிந்தது.
சரத்பாபுவுடன் விவாகரத்து பெற்ற ரமா பிரபா கையில் சுத்தமாக பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். அப்போது ரஜினி உதவியுள்ளார், பின் ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் வீடு கட்டி செட்டிலாகி இருக்கிறார்.
இடையில் குடிப்பழக்கத்திற்கு எல்லாம் அடிமையாகியுள்ளார். தற்போது வயது மூப்பு காரணமாக இப்போது தனிமையில் அனந்தபுரம் பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறாராம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் திடீரென மாற்றப்பட்ட நடிகர்- இவருக்கு பதில் இவர்தானா?