வரலக்ஷ்மி திருமணம் குறித்து பேசிய சரத்குமார்.. என்ன சொன்னார் தெரியுமா
சரத்குமார்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இவர் கடந்த 1984ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு வரலக்ஷ்மி மற்றும் பூஜா என இரு மகள்கள் உள்ளனர். 16 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் மனைவி சாயாவை கடந்த 2000ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

இதன்பின் தான் நடிகை ராதிகாவை 2001ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
வரலக்ஷ்மி திருமணம்
இந்நிலையில், தனது மகள் நடிகை வரலக்ஷ்மியின் திருமணம் குறித்து நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.

'அது வரலட்சுமியின் விருப்பம் தான். நான் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. வரலட்சுமி தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துவிட்டேன் என்று என்னிடம் கூறும் பொழுது அவருக்கு நான் திருமணம் செய்து வைப்பேன்' என்று சரத்குமார் கூறியுள்ளார்.
சென்சேஷன் இயக்குனரின் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. லைக்கா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan