மக்கள் கொண்டாடிய சரவணன் மீனாட்சி சீரியலின் ஏலேலோ தீம் பாடலை இசையமைத்தது இவர்தானா?
சரவணன் மீனாட்சி
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தொடர்களில் ஒன்று சரவணன்-மீனாட்சி. 2011ம் ஆண்டு அழகர் என்பவர் இயக்க மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் ஜோடியாக நடித்தார்கள்.
இந்த சீரியலும் ஹிட், இதில் நடித்தவர்களும் மக்களால் கொண்டாடப்பட்டார்கள், இருவரும் நிஜ வாழ்க்கையில் இணைய வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட திருமணமும் செய்தார்கள்.
அண்மையில் செந்தில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும் புகைப்படத்துடன் சந்தோஷ செய்தியை வெளியிட்டார்.
மிர்ச்சி செந்தில்
மிர்ச்சி செந்தில் தனது சமூக வலைதளங்களில் நிறைய விஷயங்கள் குறித்து பதிவுகள் போட்டு வருகிறார். இப்போது அவர் சரவணன்-மீனாட்சி தொடரின் ஏலேலோ தீம் பாடலை இசையமைத்தது யார் என்ற விஷயத்தை கூறியுள்ளார்.
ஸ்ரீஜா இளையவன் தான் இசை என கூற செந்தில் அவர் இல்லை சத்யா என்பவரை தான் இசையமைத்துள்ளார் என்று கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான எம்.ஜி.ஆர் அவர்களின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அரிய புகைப்படம்