பாக்ஸ் ஆபிஸ் : 10 நாட்களில் உலகளவில் சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
Sardar 2 movie 10 days worldwide collection: கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான சர்தார் 2 திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.
சர்தார் 2
இயக்குநர் பி.எஸ். மித்ரன் தமிழ் சினிமாவில் இரும்புத்திரை படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை பெற்ற இவர், ஹீரோ, சர்தார் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். இதில் ஹீரோ படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

சர்தார் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கார்த்தி - பி.எஸ். மித்ரன் கூட்டணி மீண்டும் சர்தார் 2 படத்திற்காக இணைந்தது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்
கடந்த வாரம் வெளிவந்த சர்தார் 2 திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் எதிர்பார்த்த வசூலை பாக்ஸ் ஆபிஸில் பெறவில்லை.

இப்படத்தின் வசூல் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வருகிறது என்பதை தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், 10 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சர்தார் 2 திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது.