இலங்கை பெண் பாடிய பாடல்.. கண்ணீர் விட்டு அழுத பிரபலங்கள்! சரிகமப Li'l Champsல் உருக்கம்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோ பெரிய அளவில் பாப்புலர். அதே போல ஜீ தமிழில் சரிகமப என்ற ஷோவை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுக்காக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் என்ற ஷோ நடந்து வருகிறது.
அந்த நிகழ்ச்சியில் பல்வேறு குழந்தைகள் பங்கேற்று அவர்களது பாடும் திறமையை உலகிற்கு வெளிக்காட்டி வருகின்றனர். இந்த வார ஷோவில் கவிஞர் சினேகன் கெஸ்ட் ஆக வந்திருக்கிறார்.
இலங்கை பெண் கில்மிஷா எமோஷ்னல்
இந்த வாரம் டெடிகேஷன் ரவுண்ட் என்பதால் போட்டியாளர்கள் பாடல் பாடி அதை யாருக்கு டெடிகேட் செய்கிறார்கள் என கூறவேண்டும்.
இலங்கை பெண் கில்மிஷா கர்ணன் படத்தில் வரும் 'கண்டா வர சொல்லுங்க' என்ற பாடலை பாடினார். அவரது மாமாவுக்கு அதை டெடிகேட் செய்வதாகவும் கூறினார். அவர் ஈழத்து போரில் உயிரிழந்த நிலையில் அவருக்காக கில்மிஷா மிக எமோஷ்னல் ஆக பாடி இருக்கிறார்.
இதை கேட்டு ஒட்டுமொத்த செட்டும் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறது. சினேகன், சைந்தவி என பலரும் கண்ணீர் விட்டு இருப்பது ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சருடன் ஜெயிலர் படம் பார்க்கும் ரஜினி! ஏர்போர்ட்டில் கூறிய சூப்பர்ஸ்டார்