சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி...
சரிகமப
சரிகமப, ஒரு பிரம்மாண்ட பாடல் நிகழ்ச்சி. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த ஷோவில் பாடல் பாடும் பலர் திறமை இருந்தும் வெளியே வர முடியாமல் கஷ்டப்பட்டவர்களாக இருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்களை தேடித்தேடி ஜீ தமிழ் சரிகமப ஷோ வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கான ஒரு பெரிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். தற்போது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆடிஷனில் தேர்வாகி இருக்கிறார்கள். இதில் பங்குபெறும் 14 வயது மித்ராவின் சோக கதை தான் அனைவரையும் பாதித்தது. மித்ராவின் அப்பா 8 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்திருக்கிறார்.
பின் சில மாதங்களில் அவரின் கிட்னி 80% செயலிழந்து போய்விட்டது தெரிய வந்துள்ளது. மித்ராவின் அம்மா தனது கிட்னி கொடுக்க ஆபரேசன் செய்தபோது ஏற்பட்ட பிரச்சனையால் அவருக்கும் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது.
அவரால் வேகமாக பேச முடியாதாம், சிரிக்க முடியாதாம், தும்ம கூட முடியாது என்று மித்ரா ஒரு எபிசோடில் சொல்லி இருக்கிறார்.
பெரிய உதவி
மித்ரா கூறிய இந்த விஷயம் பலருக்கும் சோகத்தை கொடுக்க இப்போது அவரின் குடும்பத்திற்கு ஒரு உதவி கிடைத்துள்ளது. பாடகர் ஸ்ரீநிவாஸ் தன்னிடம் ஒருவர் உங்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதாக நிகழ்ச்சியிலேயே தனக்கு வந்த மெசேஜை படித்துக்காட்டிவிட்டார்.

அதேபோல் இன்னொருவர் சரிகமப நிகழ்ச்சியில் பாடும் மித்ரா, கிருத்திகா, அபிஷேக், சஞ்சய் ஆகியோருக்கு ரூ. 50 ஆயிரம் கொடுக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.