சார்பட்டா 2 படத்தின் பட்ஜெட்.. அடேங்கப்பா இத்தனை கோடியா
சார்பட்டா பரம்பரை
பா. ரஞ்சித் இயக்கத்தில் பாக்சிங் கதைக்களத்தில் உருவான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். பாக்சிங், அரசியல் குறித்து இப்படத்தில் அழகாக காட்டியிருப்பார் இயக்குனர் ரஞ்சித்.
மேலும் பசுபதி, ஜான் கொக்கன், துஷாரா விஜயம் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளிவந்த சார்பாட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
சார்பட்டா 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சார்பட்டா 2 எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் கேட்கிறார்கள். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஆர்யா பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதில், 'சார்பட்டா 2 உருவாகிறது' என கூறி சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதன்மூலம் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதன்பின் சார்பட்டா 2 கதை குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என பா. ரஞ்சித் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
சார்பட்டா படத்தின் பட்ஜெட்
இந்நிலையில், தற்போது சார்பட்டா 2 படத்தின் பட்ஜெட் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மொத்த பட்ஜெட் மட்டுமே ரூ. 90 கோடி என கூறப்படுகிறது. பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் சார்பட்டா 2 படத்திற்காக தற்போது ஆர்யா தனது பாக்சிங் பயிற்சியை துவங்கிவிட்டார். அந்த வீடியோ கூட வெளிவந்து வைரலாகி வருகிறது.
பா. ரஞ்சித் தற்போது தங்கலான் படத்தில் பிசியாக இருந்தானால், அப்படத்தை முடித்துவிட்டு, சார்பட்டா 2 படத்திற்காக வேலைகளை துவங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
