வெறும் பணம் தானே என இருந்தேன், ஆனால்! நடிகர் சசிகுமார் ஓபன் டாக்
சசிகுமார்
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கியவர்களில் ஒருவர் சசிகுமார். இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட இவர் நடிப்பில் கடைசியாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
அதை தொடர்ந்து இன்று பிரீடம் திரைப்படம் வெளியாகியுள்ளது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட வரவேற்பை பெறப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரீடம் படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்து வந்தார் சசிகுமார். அதில் ஒரு பேட்டியில், பணம் குறித்து ஓபனாக பேசியிருந்தார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓபன் டாக்
பணத்தைப் பற்றி இப்போ ரொம்ப புரிஞ்சுகிட்டேன். புரிஞ்சுகிட்டேன் என்றால் பணத்தை மதிக்க தெரிஞ்சிக்கிட்டேன். முதல எல்லாம் மதிக்க மாட்டோம். வெறும் பணம் தானே என்று நம்ம சொல்லி சொல்லி பழகி, சில படங்கள் வேற நம்மை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்.
'தளபதி' படத்துல கூட ரஜினி சார் ரத்தம் கொடுத்துட்டு, பணம் கொடுக்கும் போது, அவங்க நன்றி சொன்ன உடனே வெறும் பணம் தானே என்று சொல்வார். அதெல்லாம் பார்த்து பார்த்து நாங்க பணத்தை மதிக்கவே இல்லை. ஆனா அந்த பணம், 40 வருஷமா என்னை மதிக்காம இருக்கியா என்று அதை மதிக்க வைத்தது அதுதான் பணத்தோட குணமாக நான் பார்க்கிறேன்