25 நாட்களை கடந்து மாஸ் வசூல் வேட்டையில் சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி... இதுவரையிலான கலெக்ஷன்
டூரிஸ்ட் பேமிலி
சசிகுமார், தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குனராக தன்னை நிரூபித்துள்ளார்.
அவரது நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளியான திரைப்படம் தான் டூரிஸ்ட் பேமிலி. அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் என பலர் நடிக்க வெளியான இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இலங்கையை பின்னணியில் கொண்ட இப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ராஜமௌலி போன்ற பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி இருந்தனர்.
குறைந்த செலவில் எடுக்கப்பட்டு மாஸ் வசூல் வேட்டை செய்த படமாக, 2025ன் ஹிட் படமாக டூரிஸ்ட் பேமிலி அமைந்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
புதிய கதை, இயல்பான கதாபாத்திரங்களுடன் படத்தை உருவாக்கி இளம் இயக்குனர் வெற்றியும் கண்டுள்ளார்.
புதிய படங்களின் ரிலீஸிற்கு மத்தியிலும் சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி 25 நாட்களில் ரூ. 80 கோடி வரை வசூலித்து மெகா பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது.