பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விஷால் வெளியேற காரணம் என்ன?- சதீஷ் ஓபன் டாக்
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் டிஆர்பியில் டாப்பில் இருந்த தொடர் பாக்கியலட்சுமி.
ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாகி வந்த தொடர் இப்போது தான் அதற்கு ஏற்ற கதையில் விறுவிறுப்பாக பயணிக்க தொடங்கியுள்ளது.
இப்போது கதையில் ஓரளவிற்கு பிரச்சனை முடிந்து அவரவர் தங்களது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள். கோபி, ஈஸ்வரியை தன்னுடன் அழைத்து சென்று ராதிகா மற்றும் அவரது அம்மாவால் நிறைய பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகிறார்.
எழில் தான் இயக்கப்போகும் அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். பாக்கியா ரெஸ்டாரன்ட் பக்கத்தில் இப்போது மது கடை வர இருப்பதால் விரைவில் அவர் பிரச்சனைகளை சந்திக்க இருக்கிறார்.
விலகிய விஷால்
விறுவிறுப்பாக தொடர் ஒளிபரப்பாகி வர திடீரென தொடரில் இருந்து விலகியிருக்கிறார் விஷால். எழில் கதாபாத்திரம் மூலம் மக்களை கவர்ந்தவர் தொடரில் இருந்து விலக நவீன் என்பவர் இப்போது அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதுகுறித்து கோபியாக நடிக்கும் சதீஷ் கூறுகையில், அவர் சீரியலில் இருந்து வெளியேறியதற்கான காரணம் எனக்கு உண்மையில் தெரியவில்லை. சிறகு முளைத்து இங்கிருந்து பறந்து போக வேண்டும் என்று நினைக்கிறார்.
அதற்கு நான் தந்தையாக என்ன சொல்ல வேண்டும் பத்திரமா பார்த்து வானத்தில் பறக்க வேண்டும் என்றுதான் சொல்லி அனுப்ப முடியும். அதைத்தான் அவருக்கு சொல்லி இருக்கிறேன்.
அவர் எங்கே போனாலும் நல்லபடியாக இருக்க வேண்டும், நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என பேசியுள்ளார்.