பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதானா?- கோபி போட்ட பதிவு, என்ன இப்படி ஆகிடுச்சு
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, விஜய் டிவியில் ஒரு காலத்தில் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகி வந்த தொடர்.
கோபி, பாக்கியாவை ஏமாற்றி ராதிகாவுடன் பழகி வந்த எபிசோட், மறைக்க அவர் செய்த விஷயங்கள், விவாகரத்து பெற்றது, பாக்கியாவிற்கு உண்மை தெரிந்தபோது என இந்த கதைக்களத்தை கொண்டபோது டிஆர்பி டாப்பில் ஓடியது.
ஆனால் கடந்த சில மாதங்களாக பாக்கியலட்சுமி தொடரின் டிஆர்பி சொல்லும் அளவிற்கு இல்லை.
நடிகரின் பதிவு
இந்த தொடரில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவரும் கோபி என்கிற சதீஷ் எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக பதிவுகள் போட்ட வண்ணம் இருப்பார்.
அவர் சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாவில், ராதிகா வீடும் இல்லை, பாக்கியா வெளியே போக சொல்லி ஆர்டர் போட போறா, எங்கே போறது. நம்ம பெஸ்ட் பிரண்ட் செந்தில் ஓட வீடு இருக்கே, வேண்டாம். இருக்கவே இருக்கே நம்ம Cloud Kitchen என பதிவு போட்டுள்ளார்.
தற்போது பாக்கியலட்சுமி கதையில் ராதிகா, கோபியிடம் விவாகரத்து பெறும் கதைக்களம் ஓடிக் கொண்டிருக்க சதீஷ் போட்ட பதிவு இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.