முத்து, மீனா முயற்சியால் லாக்கப்பில் இருந்து வெளியே வந்த சத்யா.. கதறி அழும் குடும்பம்! சிறகடிக்க ஆசை சீரியல்

By Karthick Raja Jun 11, 2026 05:05 AM GMT
Report

வெளியே வந்த சத்யா

சத்யா - ரேகாவின் காதலை தெரிந்துகொண்ட சிந்தாமணி தனது கணவரோடு சேர்ந்து ரேகாவை தங்களது வீட்டில் அடைத்து வைத்துவிட்டனர். இதன்பின், சத்யா தான் தங்களது மகளை கடத்திவிட்டான் என போலீசில் புகார் அளிக்க, போலீஸ் உடனடியாக சத்யாவை கைது செய்தனர்.

முத்து, மீனா முயற்சியால் லாக்கப்பில் இருந்து வெளியே வந்த சத்யா.. கதறி அழும் குடும்பம்! சிறகடிக்க ஆசை சீரியல் | Sathya Out From Lockup In Siragadikka Aasai Serial

மேலும், லாக்கப்பில் சத்யாவை உண்மை சொல் என கூறி அடித்தனர். இதனால் சத்யாவின் உடலில் காயங்கள் ஏற்பட்டன. இந்த நேரத்தில் ரேகா வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை மீனா கண்டுபிடிக்க, பின் முத்து தன்னுடைய புதிய நண்பரான வருமான வரித்துறை அதிகாரியை வைத்து சத்யாவை லாக்கப்பில் இருந்து மீட்டெடுத்துவிட்டார்.

சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது.. உச்சகட்ட வருத்தத்தில் ரசிகர்கள்

சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது.. உச்சகட்ட வருத்தத்தில் ரசிகர்கள்

முத்து, மீனா முயற்சியால் லாக்கப்பில் இருந்து வெளியே வந்த சத்யா.. கதறி அழும் குடும்பம்! சிறகடிக்க ஆசை சீரியல் | Sathya Out From Lockup In Siragadikka Aasai Serial

காதலில் உறுதி

வெளியே வரும் சத்யா, தான் ரேகாவைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என தனது காதலில் உறுதியாக இருக்கிறார். அவருக்கு துணையாக முத்துவும் இருக்க, ஒரு கட்டத்தில் மீனாவும் சத்யா பக்கம் வந்துவிடுகிறார்.

முத்து, மீனா முயற்சியால் லாக்கப்பில் இருந்து வெளியே வந்த சத்யா.. கதறி அழும் குடும்பம்! சிறகடிக்க ஆசை சீரியல் | Sathya Out From Lockup In Siragadikka Aasai Serial

ரேகா வீட்டிற்குள் அடைத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், முத்துவும் மீனாவும் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள். ரேகாவும் சத்யாவும் எப்படி ஒன்று சேரப்போகிறார்கள் என்பதை இனி வரும் எபிசோட்களில் பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US