சத்யா சீரியல் ஆயிஷாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? அவரே கொடுத்த பதில்
சத்யா சீரியல் ஆயிஷாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாக கடந்த சில தினங்களாக பரவி வரும் செய்திக்கு விளக்கம் கிடைத்து இருக்கிறது.
சத்யா 2
ஜீ தமிழில் வந்து சூப்பர் ஹிட் ஆன சீரியல் சத்யா. அதில் ஹீரோயினாக ஆயிஷா நடித்து இருந்தார். முதல் பாகம் ஹிட் ஆனதால் அதே பெயரில் அடுத்த பாகத்தை எடுக்க தொடங்கினர். அதிலும் ஆயிஷா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தற்போது ஜீ தமிழில் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
ஆயிஷாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா?
நடிகை ஆயிஷா கடந்த சில தினங்களாக வெளியிடும் போட்டோக்களில் அவரது நெற்றியில் குங்குமம் வைத்து இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு திருமணம் முடிந்துவிட்டது என ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அவர் குங்குமம் வைத்து இருக்கும் போட்டோக்களும் இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என ஆயிஷா தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலமாக அவர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
Also Read: சூர்யாவின் இந்த படம் பெரிய பிளாப் தான்: ஓப்பனாக சொன்ன இயக்குனர்