பாக்ஸ் ஆபிஸ்: சத்யவான் சாவித்திரி - அப்பாக்குட்டி திரைப்படங்களின் 3 நாட்கள் வசூல் விவரம்

By Karthick Raja Nov 23, 2026 04:43 AM GMT
Report

Sathyavan Savithiri & appakutty movies box office: கடந்த வாரம் திரைக்கு வந்த சத்யவான் சாவித்திரி மற்றும் அப்பா குட்டி ஆகிய இரண்டு திரைப்படங்களின் 3 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது; அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சத்யவான் சாவித்திரி

நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து, இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் சத்யவான் சாவித்திரி. இப்படத்தில் இயக்குநரும் நடிகருமான மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஹார்ட் பீட் வெப் தொடர் மூலம் பிரபலமான சாருகேஷ் இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

பாக்ஸ் ஆபிஸ்: சத்யவான் சாவித்திரி - அப்பாக்குட்டி திரைப்படங்களின் 3 நாட்கள் வசூல் விவரம் | Sathyavan Savithiri Appakutty Movies Box Office

ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வரும் சத்யவான் சாவித்திரி திரைப்படம் இதுவரை 3 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 3 நாட்களில் இப்படம் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது.

அப்பா குட்டி

இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான அப்பா குட்டி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இப்படத்திற்காக விஜய் ஆண்டனி மேற்கொண்ட புரொமோஷன் வேலைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

பாக்ஸ் ஆபிஸ்: சத்யவான் சாவித்திரி - அப்பாக்குட்டி திரைப்படங்களின் 3 நாட்கள் வசூல் விவரம் | Sathyavan Savithiri Appakutty Movies Box Office

இந்த நிலையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக 3 நாட்களை கடந்திருக்கும் அப்பா குட்டி திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 2.5+ கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களில் இந்த இரண்டு திரைப்படங்களும் எவ்வளவு வசூல் செய்கின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் ஓ.ம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் ஓ.ம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

பொறுப்பு துறப்பு: சத்யவான் சாவித்திரி மற்றும் அப்பா குட்டி ஆகிய இரண்டு திரைப்படங்களின் 3 நாட்கள் வசூல் குறித்து இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US