ஆர்யா - சாயிஷா
தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வளம் வருபவர்கள் ஆர்யா - சாயிஷா. சாயிஷா தமிழில் 2017ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான "வனமகன்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை சாயிஷா, தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடித்தார்.
சாயிஷா ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த், காப்பான் போன்ற படங்களில் நடிக்கும்போதே இவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்ததாக தகவல் வந்தது. இந்நிலையில் திடீரென ஆர்யா, சாயிஷா தங்கள் திருமணத்தை பற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினர்.
மூன்று நாட்களில் சித்தார்த்தின் டக்கர் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இவர்களுக்கு 2019ம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அதன்பின் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாயிஷா குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்கு பிறகு தான் குழந்தை Ariana-வின் புகைப்படத்தை வெளியிட்டு உலகிற்கு அறிமுகம் செய்தார்.
அசரவைக்கும் புகைப்படம்
இந்நிலையில், தற்போது அவர் குழந்தையுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் சாயிஷா போலவே Ariana-வும் இருக்கிறாரே என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். மேலும், அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.





இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
