நயன்தாரா புடவையில் ஹிந்தியில் இப்படி எழுதப்பட்டுள்ளதா?- வெளிவந்த சீக்ரெட்டான தகவல்கள்
நடிகை நயன்தாரா தமிழ் சினிமா பெருமையாக கொண்டாடும் பிரபலம். ஆரம்பத்தில் எல்லா நடிகைகளை போல காதல் காட்சி, பாட்டுக்கு நடனம், சில காமெடி காட்சிகள் என படங்கள் தேர்வு செய்து நடித்து வந்தார்.
அது அவருக்கு கை கொடுத்தது, ஆனாலும் இப்படியே நடித்தால் நிலைக்க முடியாது என்பதை புரிந்துகொண்டு தனது நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் கதைகள் தேர்வு செய்து நடித்து வந்தார்.
சோலோ நாயகியாக படங்கள் நடித்து ரிலீஸ் செய்து அதிலும் சாதனை படைத்தார்.
நயன்தாரா திருமணம்
பிஸியான நடிகையாக வலம் வந்தாலும் அவர் எப்போது திருமணம் செய்துகொள்வார் என கேட்காத ரசிகரே இல்லை என்று தான் கூற வேண்டும். இவருக்கு விக்னேஷ் சிவனுக்கு கடந்த ஜுன் 9ம் தேதி படு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
திருமண புகைப்படங்களை விக்னேஷ் சிவன் மட்டுமே இன்ஸ்டாவில் பகிர்ந்தார், உடனே புகைப்படங்கள் செம வைரலாகின.
ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட நயன்தாரா புடவையில் அவரது பெயரும், விக்னேஷ் சிவன் பெயரும் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளதாம். திருமண தேதியோடு அந்த புடவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் சில அம்மன் சிலைகளின் உருவமும் உள்ளதாம்.
அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்த கமல்ஹாசனின் விக்ரம்- இத்தனை கோடி வசூலா?