அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்த கமல்ஹாசனின் விக்ரம்- இத்தனை கோடி வசூலா?
கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பெயர் போன ஒரு நடிகர். இவர் சில வருடங்களாக படம் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர் படம் வெளியானதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.
இதுவரை படம் ரூ. 300 கோடி வரை வசூலித்துவிட்டதாக கமல்ஹாசனே ஒரு பேட்டியில் மறைமுகமாக தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவில் வசூல்
இந்தியாவை போலவே அமெரிக்காவிலும் படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. விக்ரம் படம் அமெரிக்காவில் மட்டும் ரூ. 21 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தொடர்ந்து 60 திரையரங்குகளில் 3 ஆவது வாரத்தில் ஓடிக்கொண்டு இருப்பதாகவும் விரைவில் 3 மில்லியன் டாலர்கள் வசூல் ஈட்டும் என தெரிவிக்கின்றனர் அமெரிக்கா சினிமா வட்டார குழுவினர்.
நயன்தாரா, சமந்தா என டாப் நடிகைகளின் சம்பள விவரம்- இப்போது வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?