ஜாதி பாடல்கள்.. சீனு ராமசாமி முதலமைச்சருக்கு வைத்த கோரிக்கை! நடக்குமா?
இயக்குனர் சீனு ராமசாமி தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
அவரது படங்களை பார்க்க அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். படங்கள் இயக்குவது மட்டுமின்றி அவ்வப்போது சீனு ராமசாமி சமூகம் சார்ந்த பல விஷயங்களை பற்றி ட்விட்டரில் பேசி வருகிறார்.

சாதி பாடல்கள்
தற்போது சாதி பாடல்கள் பற்றி அவர் முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை வைத்து இருக்கிறார்.
"தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள் சினிமா & தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்."
"எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை +தடை விதித்தல் செய்திட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் வேண்டுகிறேன்" என சீனு ராமசாமி குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள்
— Seenu Ramasamy (@seenuramasamy) June 23, 2023
சினிமா &
தனி இசை பாடல்கள்
எதுவாயினும்
அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில்
ஒலிபரப்பத் தடைவிதிக்க வேண்டும் என பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை +தடை…
சூப்பர் சிங்கர் 9 பைனல்: டைட்டில் வின்னர் இவர்தான்! பரிசு இத்தனை லட்சமா
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
திரையில் டான்ஸ் ஆடுறவன் இல்ல.. தரையில் இறங்கி அடிக்கிறவன்தான் தலைவன் - திவ்யா சத்யராஜ் IBC Tamilnadu