புத்தாண்டு பதிவில் விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்!
செல்வராகவன்
இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க ரசிகர்களை கொண்ட இயக்குனர்களில் ஒருவர். அவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்களின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று தான் எப்போதும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
அந்த அளவுக்கு அவரது படங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் செல்வராகவன் ட்விட்டரில் சமீப காலமாக பல தத்துவங்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் அவர் 'துணை எதற்கு' என ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டு இருந்ததால் அவர் இரண்டாம் மனைவி கீதாஞ்சலியையும் விவகாரத்து செய்ய போகிறாரோ என சர்ச்சை எழுந்தது. கடந்த வருடம் அவரது தம்பி தனுஷ் விவகாரத்தை அறிவித்த நிலையில், தற்போது இவருமா என ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

முற்றுப்புள்ளி
இந்நிலையில் செல்வராகவன் புத்தாண்டு வாழ்த்து சொல்லி போட்டிருக்கும் பதிவில் விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அவர் மனைவி உடன் இருக்கும் போட்டோவை ஜோடியாக வெளியிட்டு அவர் வதந்திக்கு முடிவு கட்டி இருக்கிறார்.
24 மணி நேரத்தில் துணிவு ட்ரைலர் செய்த பெரிய சாதனை! பீஸ்ட்டை விட அதிகமா?