உதவி கேட்டு நிற்காதீர்கள், வாழ்நாள் முழுவதும் பிரச்சனை.. செல்வராகவன் வருத்தம்
செல்வராகவன்
காதல் கொண்டேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன் பின், இவர் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரண்டாம் உலகம் போன்ற பல திரைப்படங்களை இயக்கி பிரபலமானார்.
இதில், மயக்கம் என்ன திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. குறிப்பாக, அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரிச்சா லங்கெல்லா யாமினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக வலம் வரும் செல்வராகவன். படம் குறித்த அப்டேட் மற்றும் ரசிகர்களுக்கு பயன் தரும் வகையில் பல விஷயங்களை பதிவிட்டு வருவார்.
செல்வராகவன் வருத்தம்
இந்நிலையில், தற்போது செல்வராகவன் மக்களுக்கு அறிவுரை கூறும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " ஒரு இலட்சியத்தை அடைய நினைப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதை செய்ய போகிறேன் என்பதை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
எதற்காகவும் யாரிடமும் உதவி கேட்டு நிற்காதீர்கள். நீங்கள் உதவி கேட்டு பிறர் செய்து கொடுத்து விட்டால், அதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் சொல்லி காட்டுவார்கள்" என்று கூறியுள்ளார்.

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
