செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானாவின் புதிய சீரியல் இதுவா?- வெளிவந்த லுக்
செம்பருத்தி சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு தொடங்கி 1432 எபிசோடுகளை கடந்து ஜுலை 2022ம் ஆண்டு முடிவடைந்துள்ள ஒரு தொடர் செம்பருத்தி.
சபரிநாதன் அவர்களின் கதையில் நாராயணன் மற்றும் தர்மலிங்கம் வசனம் எழுத இந்த தொடரை 5 இயக்குனர்கள் இயக்கியுள்ளார்.
முதலில் கார்த்திக் மற்றும் ஷபானா ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார்கள், பின் கார்த்தி வேடம் சில காரணங்களால் மாற்றப்பட அந்த கதாபாத்திரத்தில் அக்னி என்பவர் நடித்து வந்தார்.
இப்போது தொடர் முடிந்துவிட்டது அடுத்து என்ன இவர்கள் என்னென்ன புதிய சீரியல்கள் நடிக்க போகிறார்கள் என்பதை அரிய தான் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
ஷபானாவின் புதிய தொடர்
தற்போது நடிகை ஷபானா குறித்து ஒரு தகவல் வைரலாக வலம் வருகிறது. அதாவது ஷபானா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் Jameela என்ற ஒரு புதிய தொடர் நடிக்க இருக்கிறாராம்.
ஒரு புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் இது கண்டிப்பாக ஷபானா தான் அவர் தான் புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தொகுப்பாளினி அர்ச்சனாவின் சொந்த வீட்டின் அழகை பார்த்துள்ளீர்களா?- எவ்வளவு அழகான வீடு, வீடியோவுடன் இதோ

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
