செம்பருத்தி சீரியல் கிளைமாக்ஸ் இதுதான்.. புகைப்படம், வீடியோ இதோ
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் இந்த வாரத்தோடு முடிவுக்கு வருகிறது.
செம்பருத்தி
2017ல் தொடங்கப்பட்ட செம்பருத்தி சீரியல் நீண்ட காலமாக டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால் ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் வெளியேறியபிறகு டிஆர்பி குறைய தொடங்கியது.
ஐந்து வருடங்கள் ஓடிய இந்த தொடர் நாளை (31 ஜூலை 2022) முடிய இருக்கிறது. மதியம் 1 மணி முதல் ஐந்து மணி நேரம் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாகிறது.
கிளைமாக்ஸ் இதுதான்
இந்நிலையில் தற்போது கிளைமாக்ஸ் காட்சி பற்றி பார்வதியாக நடிக்கும் ஷபானா வெளியிட்டு இருக்கும் போட்டோ வெளியாகி இருக்கிறது. அந்த போட்டோவில் பார்வதி நெற்றியை கவனியுங்கள்.
மேலும் ஆதி ரோலில் நடிக்கும் அக்னி டப்பிங் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அகிலாண்டேஸ்வரி மற்றும் பார்வதியை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய பிறகு அவர் பேசும் வசனம் இடம்பெற்று இருக்கிறது.
அதனால் செம்பருத்தி கிளைமாக்ஸ் எப்படி இருக்கும் என தெரிய வந்திருக்கிறது. கிளைமாக்ஸில் அகிலா மற்றும் பார்வதியை ஆதி காப்பாற்றிவிடுகிறார் என்பது உறுதியாகி இருக்கிறது.
தனது தந்தையின் பிறந்தநாளை ஸ்பெஷலாக கொண்டாடிய நடிகை சினேகா- எங்கே தெரியுமா?