தனது தந்தையின் பிறந்தநாளை ஸ்பெஷலாக கொண்டாடிய நடிகை சினேகா- எங்கே தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபலங்கள் எது செய்தாலும் அது ரசிகர்களால் ஸ்பெஷலாக பார்க்கப்படும். அப்படி இப்போது ஒரு விஷயம் நடந்துள்ளது.
புன்னகை அரசி
புன்னகை அரசி என்று தமிழ் சினிமாவில் பெயர் பெற்றவர் நடிகை சினேகா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். அவர்களின் பிறந்தநாளை சினேகா மற்றும் பிரசன்னா கோலாகலமாக கொண்டாடுவார்கள். அப்படி சினேகா தனது தந்தையின் பிறந்தநாளை ஸ்பெஷலாக கொண்டாடியுள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
சினேகாவின் தந்தை ராஜா ராமுக்கு நேற்று (ஜுலை 29) 70வது பிறந்தநாள்.
அவரது பிறந்தநாளை ஸ்பெஷலாக கொண்டாட வேண்டும் என சினேகா சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள ஷெல்ட்டர் ஹோமுக்கு தனது தந்தையை அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தைகளுடன் சேர்ந்து தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஜீ தமிழின் ஹிட் சீரியல், ரசிகர்கள் ஷாக்- எந்த தொடர் தெரியுமா?