நான் எல்லாம் பிறந்திருக்கவே கூடாது, இதெல்லாம் நடக்காது- வருத்தமாக பேசிய சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ்
கார்த்திக் ராஜ்
சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் கார்த்திக் ராஜ்.
2011ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான கார்த்திக் அதன்பின் ஆபிஸ் என்ற தொடரில் நடித்தார்.
இந்த தொடர் மூலம் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. பின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் பங்குபெற்ற கார்த்திக் அதன்பிறகு யாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சினிமாவில் 465, நாலு பேருக்கு நல்லதுன்னா ஏதும் தப்பில்லை என சிறுசிறு படங்களில் நடித்த கார்த்தின் ராஜிற்கு வெற்றிப்படம் எதுவும் அமையவில்லை.
திருமணம் ஆகி சில ஆண்டுகளுக்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் நடித்துவந்த அவர் இடையில் ஏதோ காரணங்களால் வெளியேறினார். இப்போது கார்த்திகை தீபம் என்ற தொடரில் நடிக்கிறார்.

எமோஷ்னல் பேட்டி
கார்த்திக் ராஜிற்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை என நிறைய மீம்ஸ்கள் வருகின்றன. இதுகுறித்து அண்மையில் ஒரு பேட்டியில், நான் பிறந்திருக்கவே கூடாது, நான் பிறந்த காரணத்தினால் தான் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியதாக இருக்கிறது.
பிறக்காமல் இருந்திருந்தார் எந்த பிரச்சனையும் இல்லை, யாரும் நம்மிடம் எதிர்ப்பார்க்க மாட்டார்கள், நாம் செய்யும் எதையும் தவறு என்று கூற மாட்டார்கள் என மிகவும் விரக்தியாக பேசி இருக்கிறார்.

எனது வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு- மிகவும் வருத்தப்பட்டு பேசிய நடிகை சீதா