செந்தில்-கவுண்டமணி ஹிட் காமெடி காட்சியில் வந்த அழகுமணியை நியாபகம் இருக்கா?.. தற்போதைய லுக் இதோ
செந்தில்-கவுண்டமணி
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் விஷயங்கள் நிறைய உள்ளது.
அதில் காமெடியில் எடுத்துக்கொண்டால் செந்தில்-கவுண்டமணி முக்கிய பங்கு வகிப்பார்கள்.
இவர்கள் இருவரும் சேர்ந்து வரும் காட்சிகள் அனைத்துமே அமர்க்களம் தான். நக்கல், நையாண்டி, குசும்பு, கலாட்டா, விழிப்புணர்வு என எல்லாம் கலந்த கலவையாக இவர்கள் இடம்பெறும் காட்சிகள் இருக்கும்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை உலகில் கவுண்டமணி செந்தில் இருவரும் சக்கரவர்திகளாக வலம் வந்தனர். இன்று எவ்வளவோ காமெடி நடிகர்கள் வந்தபோதிலும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களாக கவுண்டமணி செந்தில் திகழ்கின்றனர்.
புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பட நடிகையை நியாபகம் இருக்கா?- சென்னையில் இப்படியொரு தொழில் செய்கிறாரா?
அழகுமணி
கவுண்டமணி-செந்தில் இடம்பெற்ற மகுடம் படத்தில் ஒரு காமெடி காட்சி இடம்பெறும். கவுண்டமணியிடம் ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தை கொடுத்து இதுதான் என் தங்கை என்று கூறிவிடுவார் செந்தில்.
புகைப்படத்தில் இருப்பவரின் அழகில் மயங்கி கவுண்டமணி திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள திருமணத்தின் போது தனது பக்கத்தில் மணப்பெண்ணாக இருப்பவரை பார்த்து ஷாக் ஆவார், அவர் தான் அழகுமணி.
தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,