9 ஆண்டுகளுக்கு பின் தாய் தந்தையான சரவணன் மீனாட்சி செந்தில் - ஸ்ரீஜா.. குவியும் வாழ்த்துகள்
செந்தில் - ஸ்ரீஜா
விஜய் தொலைக்காட்சியில் அனைவருக்கும் பிடித்த சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி.
இதனுடைய முதல் சீசனில் கதாநாயகன் - கதாநாயகியாக நடித்தவர்கள் டான் செந்தில் - ஸ்ரீஜா. இவர்கள் இருவரும் இணைந்து மாப்பிள்ளை என்ற சீரியலிலும் ஜோடியாக நடித்துள்ளார்கள்.
மேலும் கடந்த 2014ஆம் ஆண்டு இவ்விருவரும் காதலித்து திருமணமும் செய்துகொண்டனர். சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என செந்தில் அறிவித்திருந்தார்.
9 ஆண்டுகளுக்கு பின்
இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பின் செந்தில் - ஸ்ரீஜா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை செந்தில் தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை கேள்விப்பட்ட பிரபலங்கள் செந்தில் - ஸ்ரீஜா ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
வாரிசு திரைப்படம் இந்த தெலுங்கு திரைப்படங்களின் அட்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்