கோலங்கள் சீரியலால் நடிகர் ஆதிக்கு மிஸ்ஸான முக்கிய நடிகரின் படம்... அவரே பகிர்ந்த தகவல்
கோலங்கள்
90களில் தமிழ் சினிமாவில் ஒளிபரப்பான ரசிகர்களின் பேவரெட் தொடர்களில் ஒன்று கோலங்கள்.
திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த தொடர் வழக்கமான குடும்ப கதையை கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் எடுத்திருப்பார்கள்.
கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம் தற்போது சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் இயக்கி வருகிறார். முதல் பாகம் முடிவடைந்து தற்போது 2வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
நடிகர் பேட்டி
கோலங்கல் தொடரில் ஆதி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் அஜய் கபூர்.
இவர் ஒருநாள் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது, கோலங்கள் தொடரில் தேவயானியின் அம்மாவாக நடித்த சத்யபிரியா, கோலங்கள் சீரியலுக்கு வில்லன் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
நீங்கள் பொய் பாருங்க என்று சொல்ல, அவரும் போய் இயக்குனர் திருச்செல்வத்தை சந்தித்துள்ளார். அப்படி தான் சீரியல் வாய்ப்பு அஜய் கபூருக்கு கிடைத்துள்ளது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர், கோலங்கள் சீரியல் மூலம் எனக்கு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அயன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் கோலங்கள் சீரியலில் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது.ஆனாலும் இந்த படத்தில் வில்லன் கேரக்டருக்கு டப்பிங் பேசியது நான்தான் என கூறியுள்ளார்.

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
