ஜாமினில் வெளியே வந்த சீரியல் நடிகர் அர்னவ்- அவர் பதிவிட்ட புகைப்படம்
நடிகர் அர்னவ்
விஜய்யில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் நடிகர் அர்னவ்.
இதற்கு முன் சன் தொலைக்காட்சியில் கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்திருக்கிறார், அதில் தன்னுடன் நடிக்க திவ்யா என்ற நடிகையுடன் நட்பு ஏற்பட அப்படியே காதலாக மாறி திருமணமும் செய்து கொண்டார்.
உடனே திருமணம் செய்துகொள்ளாமல் 5 வருடங்களாக காதலர்களாக ஒரே வீட்டில் தான் இருந்துள்ளனர், அப்போதெல்லாம் வராத பிரச்சனை இவர்களுக்கு திருமணத்திற்கு பின் நடந்துள்ளது.
கர்ப்பமான திவ்யாவை சண்டையில் வயிற்றில் உதைத்து காயப்படுத்தியுள்ளதாக அவர் அர்னவ் மீது புகார் கொடுத்திருக்கிறார். இதனால் போலீசார் அர்னவை கைது செய்தார்கள்.

அர்னவ் பதிவு
தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள அர்னவ் தனக்கு நீதி வேண்டும் என இன்ஸ்டாவில் பதிவு போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் தான் தவறு செய்துள்ளீர்கள், திருத்திக் கொள்ளுங்கள் என கமெண்ட செய்து வருகிறார்கள்.
ரஜினி, ஷாருக்கான் படங்களில் நடிக்க மறுத்த சின்னத்திரை பிரபலம்- யார் தெரியுமா?