பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் குமரன் வீட்டில் விசேஷம்- அழகிய போட்டோ வெளியிட்ட அவரது மனைவி
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கணவன்-மனைவி-பிள்ளைகள் என தனித்தனியாக வாழ்ந்து வரும் இந்த காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்பது விசித்திரமான விஷயமாக அமைந்துள்ளது.
ஆனால் அப்படி கூட்டுக் குடும்பமாக இருந்தால் எவ்வளவு சந்தோஷம், ஆதரவு என்பதை அழகாக காட்டிவரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
4 அண்ணன்-தம்பிகள் ஒன்றாக வாழ்ந்து வரும் இவர்களின் குடும்பத்தை உதாரணமாக வைத்திருப்பவர்கள் அதிகம்.
தற்போது இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
கதிரின் மனைவி
இந்த தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் குமரன், இவர் சுஹாசினி என்ற நடிகையை தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அண்மையில் இவர்களின் திருமணநாள் வந்துள்ளது, அவரது மனைவி சுஹாசினி கணவருடன் எடுத்த அழகிய புகைப்படங்களை வெளியிட்டு தங்களது திருமண நாளுக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
மாரி செல்வராஜிற்கு உதயநிதி ஸ்டாலின் அளித்த Mini Cooper காரின் விலை இத்தனை கோடியா?