உனக்கு குழந்தையே பிறக்காதுனு சாபம் விட்டாங்க.. சீரியல் நடிகர் நவீன் மனைவி மேடையில் கண்ணீர்
பிரபல காமெடியனும் நடிகருமான நவீன் தற்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரில் நடித்து வருகிறார். அவர் மனைவி பேசி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்
விஜய் டிவியின் நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் நடக்கும் விருது விழா வருடம்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருட Vijay Television Awards நிகழ்ச்சியின் முன்னோட்டமாக தற்போது மதிய நேர சீரியல் நடிகர்கள் பங்கேற்ற 'வெற்றிநடை போடும் மதியமே' என ஷோ நடத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் முதல் முன்னோட்டம் தற்போது வெளிவந்து இருக்கிறது.
நவீன் மனைவி கண்ணீர்
அந்த ஷோவில் பேசிய நவீனின் மனைவி பேசும்போது, "எல்லோரும் செய்யும் கமெண்ட் என்னவென்றால்.. உனக்கு எல்லாம் பிள்ளையே பிறக்காது, நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவீங்க.. அப்படி நிறைய பேர் சொல்லி இருக்காங்க."
"சாபம் விட்ட எல்லோருக்கும் நன்றி. இப்போவும் சொல்கிறேன்.. என்னை தாண்டி தான் எந்த கஷ்டமும் இவரை (நவீனை) நெருங்க விடுவேன்" என கூறி கண்ணீர் மல்க பேசி இருக்கிறார்.
நவீன் அவரது நெஞ்சில் மனைவி முகத்தை பச்சை குத்தி இருப்பதை காட்டி இருக்கிறார்.
ப்ரோமோ இதோ..
குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
