மறைந்த சீரியல் நடிகர் நேத்ரன் மகள் அபிநயா எமோஷ்னல் பதிவு... ஆறுதல் கூறும் ரசிகர்கள்
நேத்ரன்
தமிழ் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக பரிச்சயமானவராக இருப்பவர் நேத்ரன்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பொன்னி போன்ற சீரியல்களிலும் கலைஞர் தொலைக்காட்சியில் ரஞ்சிதமே சீரியல்களிலும் நடித்து வந்தார்.
ஆனால் திடீரென எல்லா தொடர்களில் இருந்தும் அவரை காணவில்லை, காரணம் கடந்த 6 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அபிநயா பதிவு
நேத்ரன் இறப்பிற்கு பிறகு அவருடைய மகள் அபிநயா ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், உங்களை ஒரு ஹீரோவாக பார்க்க உலகம் தவறிவிட்டது. ஆனால் நீங்கள் எப்போதும் எங்களுக்கு பிடித்த ஒரே ஹீரோவாக இருந்தீர்கள்.
உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போனது உங்கள் தவறல்ல, நாங்கள் அதை செய்வோம் என்று தன்னம்பிக்கையோடு போஸ்ட் போட்டு இருக்கிறார்.
அபிநயாவின் பதிவுக்கு கீழ் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.